போதைப்பொருள் கடத்தல் – சொத்துகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் – சொத்துகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் , பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர் . அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், ஜா-எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 400 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீட்டையும் காணியையும் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாள்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )