
ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் 20% எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது. இதேநேரம் ஹோர்முஸ் நீரிணையை மூடலால் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மாத்திரம் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.
பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன.
40 ஆயிரம் மெட்ரிக் தொன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும் இது இன்னும் இரண்டு நாள்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் நந்தா தேவி கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது .முன்னதாக மற்றுமொரு இந்திய எண்ணெய் கப்பல் ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையை கடந்து மும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
