
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது.
நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை உள்ளடக்கும் தெரிவிக்கப்படுகிறது .IMF இதுவரை இலங்கைக்கு ஐந்து தவணைகளை வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, நாட்டின் பொருளாதார செயல்திறனுக்காக IMF நிபந்தனைகளுக்கு இணங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் விரிவாக மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன .
மதிப்பாய்வைத் தொடர்ந்து ஆறாவது தவணையை விடுவிப்பது தொடர்பில் தேவையான ஒப்பந்தங்கள் செய்யப்படும் என நிதி,திட்டமிடல் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
