வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்  மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் 39℃ முதல் 45℃  வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொது மக்கள் முடிந்தவரை நீர் அல்லது பொருத்தமான திரவ ஆகாரங்களை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்குமாறும் முடிந்த வரை நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கூடியளவு வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )