காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்

காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்

அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மக்கள் வீதியை மறித்து பதாதைகளை ஏந்திவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share This