
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அவர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறை இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தை அங்கீகரிப்பதும், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடியாக உதவுவதும் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் பயணத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.
“இந்தத் திட்டத்தின் வெற்றியைக் காணவும், உங்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் இலங்கை வருவதாக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
