
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம் – எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள போதிலும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
2025-2026 காலபோக நெற்ச்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய சிறுகுளங்கள்,மானாவாரி நிலம் செய்கை உள்ளடங்களாக 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது மாவட்டத்தின் சில பகுதிகளில் விளைந்த நெல் வயல்களில் நெல் அறுவடையை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.
அக்கராஜன்குளம், பெரியகுளம் போன்ற பகுதிகளில் சில வயல் நிலங்களில் நெல் அறுவடையில் விவசாயிகள் ஈடுபடுவதை காணமுடிகிறது. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES Uncategorized
