ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது

ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது

ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ஆபத்தாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

“2027 உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்தும் இருக்கின்றது. ஆனால் உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அப்படியில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் என்ன பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விராட் மற்றும் ரோஹித்தின் ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் வடிவம் மேலும் பலவீனமடையும் எனவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

50 ஓவர் கிரிக்கெட் ஒரு காலத்தில் ஒரு சிறந்த வடிவமாக இருந்தது, மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்வான் வீரர்களை உருவாக்கியது எனவும் அஸ்விக் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா அணி சார்பில் அனைத்து வடிவங்களிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )