இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு

இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு

நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஐஸ் போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அதன் உதவி இயக்குநர் தமரா தர்ஷன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின்படி மெத்தம்பேட்டமைன் எனப்படும் ஐஸ் போதைப்பொருளின் படிப்படியான அதிகரிப்பை அடையாளம் காண முடியும்.

கஞ்சா தொடர்பாகவும் ஒரு குறிப்பிட்ட போக்கை அடையாளம் காண முடியும்.

இருப்பினும், ஹெராயின் மற்றும் கஞ்சா எனப்படும் இரண்டு போதைப்பொருட்களுடன் ஒப்பிடும்போது, ​​ஐஸ் போதைப்பொருளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

போதைப்பொருள் பயன்படுத்தும் 99 வீதம் பேர் பாலிட்ரக் பயன்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என இதன் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )