
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி நீக்கம்!
மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரியை இன்று (29) முதல் அரசாங்கம் நீக்கியுள்ளது.
மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி 60 டொலர் புறப்பாடு வரி வசூலிக்கப்படாது என்பதை நிதி அமைச்சகம் ஒரு சிறப்பு சுற்றறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சலுகை அடுத்த ஆண்டு ஜூன் 26 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகமான விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளை ஈர்ப்பதும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
CATEGORIES இலங்கை
