மருந்து தட்டுப்பாட்டுக்கு மாபியாவே காரணம் – ஹன்சக விஜயமுனி
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் இல்லையெனவும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றும் அரச மருந்து சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள நிலையற்ற தன்மைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு பல தரப்பினரும் பதிலளித்துள்ளனர்.
நாட்டில் மருந்து மாபியா செயற்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதியமைச்சர், மருந்து தட்டுப்பாட்டுக்கு மாபியாவே காரணம் என கூறியுள்ளார்.