
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் விபத்து – ஒருவர் பலி
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சொகுசு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பேருந்து நடத்துனர், மோட்டார் சைக்கிள் பயணி, காரின் சாரதி மற்றும் பெண் ஆகியோர் அடங்குவதாக குடா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், காரின் சாரதி வாகனம் ஓட்டுவதில் அலட்சியமாக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெறுள்ளது. உயிரிழந்தவர்கள் 15 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
