
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்த மண் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
மேலும் வீதிக்கு மேல் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் நிரந்தர தீர்வு காணப்படும் வரை போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக வீதி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் பணிகள் நிறைவடையும் வரை வீதியில் எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
