உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை

உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம் எனவும் அவ்வாறு இல்லையெனில் உக்ரேனிய துருப்புக்கள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற்றுவோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள சில திட்டங்களுடன்  உடன்படவில்லை எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள விளாடிமிர் புடின்  பயணத்திற்கு முன்னதாக இந்தியா டுடேவுடனான செவ்வியில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதற்கான அமைதி ஒப்பந்த திட்டத்தை முன்வைத்துள்ள அமெரிக்கா, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக சிறப்பு தூதுவர் அடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு தூதுவர் இடம்பெற்றுள்ள அமெரிக்க குழு ரஷ்ய தரப்புடன் மொஸ்கோவில் சந்தித்துப் பேசியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர்,  ரஷ்ய ஜனாதிபதி “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )