இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.

டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்​ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, ரஷ்​யா​வின் ஐந்​தாம் தலை​முறை போர் விமான​மான சுகோய் எஸ்​யு57 போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக இந்​தி​யா, ரஷ்யா இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனிடையே, இந்​திய, ரஷ்ய உச்சி மாநாட்டின் ஒரு பகு​தி​யாக இரு நாடு​களின் தொழில​திபர்​கள் பங்கேற்​கும் கூட்​டம் டில்லி பாரத் மண்​டபத்தில் இன்று பிற்பகலில் நடை​பெறவுள்ளது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி​யும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கலந்துகொண்டு உரை​யாற்ற உள்​ளனர்.

இதில் இரு நாடு​களை சேர்ந்த 150க்​கும் மேற்​பட்ட தொழிலதிபர்கள் பங்​கேற்க உள்​ளனர்.

முன்னதாக நேற்று மாலை இந்தியாவுக்கு வந்த ஜனாதிபதி புடினை, பிரதமர் நரேந்​திர மோடி விமான நிலை​யத்​திற்கு நேரில் சென்று வரவேற்​றிருந்தார்.

மேலும், பிரதமர் மோடி சார்பில் புடினுக்கு சிறப்பு விருந்தும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )