சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்தது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தாய்லாந்திலிலிருந்து வருகைத் தந்த தம்பதியினரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை மொத்தம் 1,966,256 சுற்றுலாப் பயணிகள்
வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மாத்திரம் 161,383 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இதன்படி,இந்தியாவிலிருந்து 35,131 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 12,822 பேரும் வருகைத் தந்துள்ளனர்.
அத்துடன் ஜெர்மனியிலிருந்து 9,998 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவிலிருந்து 6,998 பேரும் அமெரிக்காவிலிருந்து 5,009 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதுடன்
மாலைத்தீவு மற்றும் பிரான்ஸிலிருந்து சுமார் நான்காயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.