
மீட்பு பணியின் போது உயிரிழந்த விமானி – முழு விமானப்படை மரியாதையுடன் இறுதிக் கிரியை
பேரிடர் மீட்பு பணியின் போது வென்னப்புவ, லுனுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற்றன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விமானப்படை, விமானியின் உடல் இன்று இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டரின் தலைமை விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய, லுனுவிலவில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.
விபத்து ஏற்பட்டபோது மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோக நடவடிக்கையில் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டிருந்தார்.
விபத்துக்குள்ளான நேரத்தில், இரண்டு விமானிகள் உட்பட ஐந்து விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்தனர், மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரினால் அவர்கள் விரைவாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், தலைமை விமானி, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, விபத்தில் உயிரிழந்தார். அவர் 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்த அனுபவம் வாய்ந்த விமானி என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
