
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், போஞ்சி, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபா முதல் 800 ரூபா வரை அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கும் விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES இலங்கை
