குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள்
கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட சுட்டிக்காட்டியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )