மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு

மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு

இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ – ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது, ​​வென்னப்புவ – ஜின் ஓயா அருகே உள்ளபாலத்தில் தரையிறங்க முயன்றபோது, ​​ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இருப்பினும், விமானி மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு உயிர் பிழைத்த போதிலும், ஆபத்தான நிலையில் இருந்த தலைமை விமானி, மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )