
சீரற்ற வானிலை – 56 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
