பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஒருவர், இதன் மூலம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கை தடைசெய்யப்பட்டது, இதை இஸ்லாமிய அரசு அல்லது அல் கொய்தா அமைப்புக்கு இணையாகக் கொண்டு, அதன் உறுப்பினராக இருப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு பிரித்தானியாவில் உள்ள இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்களை ‘நேரடி நடவடிக்கை’ மூலம் அதிகளவில் குறிவைத்து வந்துள்ளது.

பெரும்பாலும் நுழைவாயில்களைத் தடுப்பது, ஜன்னல்களை உடைப்பது அல்லது வணிகங்களில் சிவப்பு வண்ணப்பூச்சு தெளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தது.

இந்நிலையில், குறித்த அமைப்பு மீதான தடையை விமர்சிப்பவர்கள், சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டச் செயல்கள் பயங்கரவாதத்திற்குச் சமமாகாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கை போராட்ட உரிமைகளைக் குறைப்பதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.

காசாவில் இடம்பெற்ற போரின் போது இந்த குழுவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. பாலஸ்தீன நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரித்தானிய நிறுவனங்களை குறிவைத்து போராட்டங்கள் நடத்தியதன் மூலம் முக்கியத்துவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )