வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்​நாட்​டில் வட மாநிலத்​தோருக்கு வாக்​குரிமை வழங்​கி​னால் மக்​கள் புரட்சி வெடிக்​கும் என சுட்டிக்காட்டினார்.

வட மாநிலத்​திவர் தமிழகத்தில் வேலை செய்ய முடியும் எனவும், வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​திக் கொள்​ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வாக்​குரிமை என்​பது அவர​வர் பிறந்த மாநிலத்​தில்​தான் இருக்க வேண்​டும். எனவே, வடமாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களுக்கு இங்கு வாக்​குரிமை கொடுத்​தால் அது தவறான முன்​னு​தா​ரண​மாகி​விடும்.

இதேவேளை, ஜனவரி ஒன்பதாம் திகதி கடலூரில்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

மக்​கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடத்​தப்​படும் குறித்த மாநாட்​டில் கூட்​டணி நிலைப்​பாடு தொடர்பில் தெளி​வான முடிவு​கள் எடுக்கப்​படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )