
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (25) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கையில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
குறித்த முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
