பீடி இலைகளுடன் இருவர் கைது

பீடி இலைகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நேற்றையதினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 699 கிலோகிராம் 700 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கெப் ரக வாகனமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொரிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This