க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CID யில் முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.
இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
