உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த அனர்த்தம் காரணமாக, பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Share This