இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த ஒருவருக்குப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உதவியை உடனடியாக வழங்குவதற்காக, விமானிக்குக் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன.

குறித்தப் பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த விமானம் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

Share This