திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களது கொடும்பாவிகள் எரிப்பு

முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் குளங்களும் காணப்படுவதாகவும் அவை இந்திய சோலார் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும், அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோர் தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் அதனால் அவர்களது கொடும்பாவிகளை தாம் எரித்து தமது எதிர்ப்பினைவெளிப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
