மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக ரயில் பாதையில் பெருமளவான மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு வரும் அஞ்சல் ரயில் ஆகிய இரண்டும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் தடம் சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
