ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை தடுப்பதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
