விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்படி, முதல் கட்ட பேச்சுவார்த்தை சற்று சுமுகமாக முடிந்துள்ளதாகவும், இதனால் அதிகமுகவின் முக்கிய பிரமுகர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் நேரடியாக இறங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து மத்திய ஆளும் கட்சியான பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும் தமிழக ஆளும் கட்சியான திமுகாவை அரசியல் எதிரி எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், அதிமுகவை அவர் பெரிதான விமர்ச்திருக்கவில்லை. இதனால் இரு தரப்பினர்களும் கூட்டணி அமைக்க கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் தனித்து போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நாள் அடைவில் ஏற்பபட்ட அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பின்னர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை அடுத்து விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
