இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்

இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்

இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இங்கு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம் என்றும்
அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் அண்மைய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This