கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – மற்றுமொரு பெண் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – மற்றுமொரு பெண் கைது

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கடந்த 07 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போதே அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வெளிநாட்டில் வசிக்கும் குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பைப் பேணி, சந்தேக நபர்களுக்கு காரொன்றை வழங்கியமை மற்றும் கொலை செய்யப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை வழங்கியமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share This