பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான
சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
