82 இலங்கையர்களுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை

82 இலங்கையர்களுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை

கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் இந்த விடயம் ஏற்கனவே சர்வதேச பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஷநாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த  ஒக்டோபரில் பாதாள உலகில் கைது செய்யப்பட்ட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை துபாய் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விரைவாகக் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபர் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு முடியும் வரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாது என்று ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு முடிவடைய குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் சார்பாக இலங்கையைச் சேர்ந்த  சட்டத்தரணி ஒருவர் துபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share This