இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!! இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

“தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

எனவே, தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய தலைநகர் புது டில்லி செங்கோட்டை அருகோ இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் குறித்த தான் மிகுந்த கவலை கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள செங்கோட்டை அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், நினைவுச்சின்னத்திற்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவொரு தற்கொலை பயங்கரவாத தாக்குதல் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Share This