சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 58 வாகனங்கள்

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 58 வாகனங்கள்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்முதலை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30 ஆசனங்கள் அடங்கிய 10 பஸ் வண்டிகள், 10 வேன்கள், 5 வாடகை பௌசர்கள் மற்றும் 3 டிரெக்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென விலைமனு கோரப்பட்டதுடன் 8 பேரினால் விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளின் அன்றாட பணிகள் மற்றும் கைதிகளின் நலன்கள் சார்ந்த விடயங்களிலும் இந்த வாகன கொள்வனவு அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This