கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி – விசாரணைகள் தீவிரம்

தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தள மேற்பார்வையாளரான கொரிய நாட்டவரும் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் ஆவர். கொரிய நாட்டவருக்கு 50 வயது.
இருப்பினும், மரணம் எப்படி நடந்தது என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
