வடக்கு அயர்லாந்தில் கல்வி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

வடக்கு அயர்லாந்தில் கல்வி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதால் அவருக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மானம்

வடக்கு அயர்லாந்தின் கல்வி அமைச்சர் பால் கிவன் அண்மையில் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் காரணமாக, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டோர்மாண்ட் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை People Before Profit கட்சியைச் சேர்ந்த ஜெர்ரி கரோல் முன்மொழிந்துள்ளார்.

இதற்கு சின் ஃபைன், அலையன்ஸ் கட்சி, மற்றும் SDLP ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற யூனியனிஸ்ட் மற்றும் நேஷனலிஸ்ட் கட்சிகளின் இணைந்த ஆதரவு தேவைப்படும்.

அதனால், இது தோல்வியடையும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

DUP, UUP, மற்றும் TUV கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தீர்மானத்தை “செயல்திறன் அற்றது என கூறியுள்ளன.

Share This