லிவர்பூல், ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதம்

பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதமாகி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
படகுகள் நிறுத்தும் போது தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்பை மாற்றும் பணிகள் இந்த மாத ஆரம்பத்தில் நிறைவு செய்யப்பட்ட வேண்டியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் நேரம் கோரியதால் பணிகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக தேவையான கனரக பொருட்களை தூக்கும் இயந்திரம் கிடைக்காமையால் இந்த திட்டம் மேலும் தாமதமானதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, நவம்பர் 15 மற்றும் 16 திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த முதன்மை “மேன்க்ஸ்மேன்” படகு பயணங்கள், ஹெய்ஷாம் துறைமுகத்திற்கே மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
