நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட குழுவொன்றை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்வரும் 10 வருடங்களுக்கென நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதார கொள்கைக்கமைய டிஜிட்டல் பரிணாமத்திற்கு அதனை உட்படுத்துவதற்கான இயலுமைகள் குறித்தும் அவற்றை பின்பற்றக்கூடிய நீண்ட மற்றும் குறுகிய கால செயன்முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
டிஜிட்டல் மயப்படுத்தலுக்கென வழிமுறைகள் அடங்கிய திட்டத்தை உருவாக்குதல், டிஜிட்டல் ஊடகம் வழியாக சுகாதார பாதுகாப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், அதற்கென சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பிரதான வேலைத்திட்டங்களை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
