புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம், முல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
