சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

அன்னாரின் திருவுடல் இன்று (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This