நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் பலி

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 05 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This