முல்லைத்தீவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதான மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், நேற்று(07) அதிகாலை சுமார் 2.45 அளவில் விழித்து,
கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.
அதன் பின்னர் அந்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து,
உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
