
மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை
நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.
தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
CATEGORIES இலங்கை
