கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து – ஒருவர் பலி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து – ஒருவர் பலி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த பயணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This