பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
