முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் நேற்றிரவு (06) பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This